திமுகவினரிடையே மோதல்: ஆம்பூரில் நகரமன்ற தலைவர் தேர்தல் தற்காலிக நிறுத்தம்

திமுகவினரிடையே மோதல்: ஆம்பூரில் நகரமன்ற தலைவர் தேர்தல் தற்காலிக நிறுத்தம்
X

ஆம்பூரில் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் 

திமுகவின் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஆம்பூரில் நகரமன்ற தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவருக்கான மறைமுக வாக்குப்பதிவு துவங்கி முதல் வார்டு உறுப்பினர் ரஜியா என்பவர் மட்டும் வாக்களித்த நிலையில் திமுகவின் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஏஜாஸ் அஹமத் என்பவர் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி வாக்கு பதிவு மையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேஜை மீது இருந்த கோப்புகள் அனைத்தையும் தூக்கி எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மற்றுமொரு வேட்பாளர் ஷப்பீர் அஹமத் ஆதரவாளர்களுக்கும் ஏஜாஸ் அஹமத் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டதால் தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகீலா தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் தேர்தலை நடத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!