மாதனூர் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் தேர்வு

மாதனூர் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 23 பேர் ( திமுக 17, அதிமுக 5, சுயேச்சை 1) வாக்களித்தனர். இதில் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் வெற்றி பெற்றார்.
பிற்பகல் மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்காக திமுக சார்பில் சாந்தி சீனிவாசன் மற்றும் அதிமுக சார்பில் ஜெயந்தி கோபிநாத் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சாந்தி சீனிவாசன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu