ஆம்பூர் அருகே நாட்டுவெடியை கடித்த பசுமாடு படுகாயம்

ஆம்பூர் அருகே  நாட்டுவெடியை கடித்த பசுமாடு படுகாயம்
X

நாட்டு வெடிகுண்டு மாதிரி படம்.

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடியை கடித்து பசு மாடு படுகாயம். வனத்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் கறவை மாடு வளர்த்து வருகின்றார்

இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக பசுமாடு விட்டுள்ளார். அங்கு வனவிலங்குகளை வேட்டையாட, மர்மநபர்கள் நாட்டுவெடிகளை மாங்கொட்டையின் மறைத்துஅப்பகுதியில் வீசி உள்ளதாக கூறப்படுகிறது

மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு அதனை கடித்த போது வெடித்து சிதறி பசுமாட்டின் தாடை கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இது தொடர்பாக ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஏற்கனவே ஆம்பூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பசுமாடு ஒன்று இதேபோன்று மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த வெடியை கடித்து தாடை கிழிந்து பசுமாடு உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே வனத்துறையினர் இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!