ஆம்பூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்து பசுமாடு படுகாயம்

ஆம்பூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்து பசுமாடு படுகாயம்
X

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்து பசுமாடு படுகாயம்

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்து பசுமாடு படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வனப்பகுதியை ஒட்டி மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது,

அப்போது அங்கு மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் வெடிகுண்டு வெடித்து சிதறியதால், பசுமாடு வாயில் படுகாயமடைந்து உள்ளது

இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட மர்மநபர்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!