காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு: தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்எல்ஏ உத்தரவு

காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு: தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்எல்ஏ உத்தரவு
X

மாதகடப்பு மலை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ வில்வநாதன்

மலை கிராமத்திற்கு செல்லும் சாலை காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால், தற்காலிக தரைப்பாலம் அமைக்க எம்எல்ஏ உத்தரவிட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதகடப்பு மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சாலையை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தற்காலிக தரைப்பாலத்தை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வண்ணான்துறை கானாற்று பகுதியில் 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் ராஜேந்திரன் பார்வையிட்டனர் இதேபோல் ஆம்பூர் அடுத்த அழகாபுரி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சான்றோர்குப்பம் ஏரி பகுதியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து செல்வதால் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக கரைய வலுப்படுத்தி சுற்றுச்சுவர் மீண்டும் புதுப்பித்து கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products