பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

பாலாற்றின் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
X

பாலாற்றின் தரைப்பாலத்தை ஆய்வு செய்த கலெக்டர்

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றின் தரைப்பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரை பாலத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 2 மாதத்திற்கு மேலாக தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளதால் ஆபத்தான நிலையில் மக்கள் தரை பாலத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அதற்கு தண்ணீரை வேறு பாதையில் திருப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தரைப்பாலம் ஒரு சில பகுதியில் பழுதடைந்து உள்ளதால் அதனை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் என பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்