ஆம்பூர் மலை கிராமத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த கலெக்டர்

ஆம்பூர் மலை கிராமத்துக்கு நேரடியாக சென்று  ஆய்வு செய்த கலெக்டர்
X

நாயக்கனேரி கிராமத்தில் ஓட்டு போடுவது அவசியம் என எடுத்துரைத்து வாக்களிக்க கேட்டுக்கொண்ட கலெக்டர்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்துக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரடியாக சென்று வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சியில் வாக்குப்பதிவு 6 மையங்களில் நடைபெற்றது இதில் நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அதிகாரியுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் நாயக்கனேரி கிராம மக்களை சந்தித்து வாக்களிக்க வலியுறுத்தி மக்களை சந்தித்து ஓட்டு போடுவது அவசியம் என எடுத்துரைத்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காமனூர்தட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 20 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். நாயக்கனேரி ஊராட்சியில் 3440 வாக்காளர்கள் உள்ள நிலையில் 6 மையங்கள் அமைத்து இருந்த நிலையில் 5 மையங்களில் யாரும் வாக்களிக்காத நிலை உள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!