ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு

ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு
X

புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஆம்பூரில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மேல்சாணாங்குப்பம் ஊராட்சி மணியார்குப்பம் கிராமத்தில் புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நரியம்பட்டு அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், மாதனூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, மருத்துவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!