ஆம்பூர் அருகே தந்தையின் கண்முன்னே குளத்தில் மூழ்கி குழந்தைகள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தந்தையின் கண்முன்னே குளத்தில் மூழ்கி குழந்தைகள் உயிரிழப்பு
X

குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஜஸ்வந்த், ஹரி ப்ரீத்தா.

ஆம்பூர் அருகே தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரனுக்கும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8), ஹரி ப்ரீத்தா (வயது 6) ஆகி 2 குழந்தைகள் உள்ளது.

லோகேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமியார் வீடு ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியில் மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மீனாட்சி அருகிலுள்ள காலணி தோல் தொழிற்சாலையில் இன்று வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று விநாயகர்சதுர்த்தி விடுமுறை என்பதால் லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கைலாசகிரி மலை மீது முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள குளத்தில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு குழந்தைகளும் குளத்தில் நீரில் மூழ்கியுள்ளன. இதனை பார்த்த தந்தை லோகேஸ்வரன் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் ஆழமான பகுதியில் சென்றுள்ள இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு லோகேஸ்வரன் தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அங்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மலை மீது சென்று குளத்தில் மூழ்கி கிடந்த இரண்டு குழந்தைகளை சடலமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து மலை மீது இறந்து கிடந்த ஒரு குழந்தையை தூளி கட்டி மலைமீது கொண்டு வந்தனர். இன்னொரு பெண் குழந்தையை தோலில் சுமந்தவாறு உமராபாத் உதவி ஆய்வாளர் காந்தி அடிவாரத்துக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!