ஆம்பூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
X
ஆம்பூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு. போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பூவழகி. இன்று மாலை நிலத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது மணியாரகுப்பம் அருகே நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பூவழகி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம்.

இதுகுறித்து பூவழகி ஆம்பூர் கிராமிய காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!