ஆம்பூர் அருகே மளிகை கடையில் பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே மளிகை கடையில் பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
X

மளிகை கடையில் பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர். உமராபாத் போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியை சேர்ந்தவர் சம்பத் அவரது மனைவி அலமேலு இன்று கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார் 18 ரூபாய்க்கு 2 சிகரெட் வாங்கிகொண்டு 2 ரூபாய்க்கு ஷாம்பு கேட்டுள்ளார்.

அதை எடுக்க முற்படும் போது திடீரென கடைக்குள் நுழைந்த இளைஞர், அலமேலுவை முகத்தை மூடி, சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

உடனடியாக அலமேலு உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு மற்றொரு கடையில் இருந்த சிசிடிவி கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai in future agriculture