ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது
X

ஆம்பூர் அருகே நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த 3 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனள்ளி பகுதியை சேர்ந்த அப்துல் முஜீத் இவர் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் அனிமேஷன் கோர்ஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது 2 நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் குறும்படம் எடுத்துவிட்டு இன்று வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அண்ணா நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்கம் உள்ள எஞ்சினில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர் திடீரென நிறுத்தி காரில் இருந்த மேலும் 2 பேரை பத்திரமாக கீழே இறக்கியுள்ளார் அதைத்தொடர்ந்து எஞ்சின் பகுதியிலிருந்து தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் கார் முற்றிலுமாக எரிந்தது. காரில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், கேமரா உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமானது.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்