ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு
X

ஆம்பூர் அருகே சாலை விபத்தில்  பலியான பாதிரியார் தாவீது, பாதிரியார் விக்டர் மோகன்

ஆம்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து: 2 பாதிரியார்கள் உயிரிழப்பு ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கர்நாடகா மாநிலம் பெங்களூர் கெட்டலஹள்ளி பகுதியில் இயங்கி வரும் டி.பி.எம். சீயோன் பெந்தகோஸ்தே மிஷன் சபையின் மூத்த பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்

இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் விரைந்து சென்று உயிரிழந்த பாதிரியார்கள் உடல்களை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த ஓட்டுநர் சாம்சனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி திருச்சபை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!