ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து: 3 பேர் படுகாயம்

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து:  3 பேர் படுகாயம்
X

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கார் விபத்து

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விபத்து 3 பேர் படுகாயம் ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலை சந்திப்பில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் நகர காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் மற்றும் ஆட்டோ இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தினர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் மறைத்து பையில் வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare