பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு
X

விண்ணமங்கலம் ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் 

ஆம்பூரில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விண்ணமங்கலம் ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியாக மழை பெய்ந்து வரும்நிலையில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆம்பூர் பாலாற்றில் இருந்து விண்ணமங்கலம் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாக இதனால் ஏரிக்கு செல்லக்கூடிய தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது என அப்பகுதி விவசாயிகள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இதனைத்தொடர்ந்து அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!