ஆம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்
2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ வில்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான சுட்டகுண்டா மலை கிராமத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சுட்ட குண்டா, அரங்கல்தூருகம், அபிகிரிபட்டறை, பொன்னப்பள்ளி, கதவாளம், பாசனபள்ளி, ஆகிய கிராம மக்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவர்களிடம் மீண்டும் பேருந்து இயக்க மனு அளித்தனர்.
அதன் பேரில் உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைதொடர்ந்து இன்று ஆம்பூரில் இருந்து சுட்டகுண்டா வரை செல்லக்கூடிய அரசு பேருந்து (ஜி21/ஏ) ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .
இன்று முதல் சென்று கொண்டிருந்த பேருந்து 2 முறை இந்த வழித்தடத்தில் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மகளிருக்கான பேருந்து கட்டணம் இல்லை என்பதால் தமிழக அரசுக்கும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu