ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு..

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு..
X

ஆம்பூர் அருகே கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பெண்

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டது, மாவட்டத்தில் முதல் தொற்று என மருத்துவர்கள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த செல்வி ( வயது 40) என்ற பெண் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஸ்கேன் மூலம் கருப்பு பூஞ்சை நோய் இருப்பதாக மின்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இதற்கான சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது மருத்துவ குழுவினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்

இதுகுறித்து மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் ராமு அவர்களை கேட்டதற்கு, தற்போது மின்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் செல்வி என்ற கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருப்பு புஞ்சை நோய்தொற்று அறிகுறி மற்றும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.

கடந்த 1 மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்கனவே காச நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
the future of ai in healthcare