ஆம்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

ஆம்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய  4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
X

விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர்.

ஆம்பூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் மக்கள் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி, இறைச்சி, மற்றும் மளிகை கடை திறக்க அரசு அனுமதித்துள்ளனர் .

அரசு விதிமுறைகளை மீறி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனா வைரஸ் பரவும் வகையில் செயல்பட்ட பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடை, அரசு மருத்துவமனை சாலையில் காலனி விற்பனை கடை, மோட்டுகொள்ளை பகுதியிலுள்ள சலூன் கடை என 4 கடைகள் அரசு விதிமுறைகள் மீறி கொரோனா வைரஸ் பரவும் வகையில் செயல்பட்ட கடைகளுக்கு ஆம்பூர் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் சீல் வைத்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவும் வகையில் செயல்படக்கூடிய கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!