/* */

ஆம்பூர் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு

ஆம்பூரில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு, கொலையா? தற்கொலையா?காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே  35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் திடீரென துர்நாற்றம் வீசுவதாக நிலத்தில் வேலை செய்தவர்கள் வெங்கடேசன் இடம் தெரிவித்தனர். அதன்பேரில் கிணற்றில் சென்று பார்த்தபோது சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு வெங்கடேசன் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்க ஆம்பூர் தீயணைப்புத் துறையினரை வரவைத்து கிணற்றிலிருந்து சடலத்தை தீயணைப்புத்துறையினர் கயிறுகள் மூலம் கட்டி மேலே எடுத்து பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 35 வயதில் வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 15 July 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!