ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்
X

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் 

ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சிலர் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் ஆம்பூர் பஜார் பகுதிகளில் குறுகிய இடம் என்பதால் அங்கு மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் சேர்வதால் பஜார் பகுதிகளில் கடைகளைத் திறக்கக் கூடாது என்று வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக ஆம்பூர் பகுதிகளில் வணிகர் சங்கங்கள் உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பஜார் பகுதிகளில் கடை திறக்க கூடாது எனவும், அதே நேரத்தில் காய்கறி அத்தியாவசிய பொருட்களை வாகனம் மூலம் வீட்டுக்கு கொண்டு விற்கவும் மேலும் மொத்த காய்கறி விற்பனையை தனியார் பள்ளி வளாகத்தில் அனுமதி வழங்கியும் முடிவெடுக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!