/* */

ஆம்பூர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு

ஆம்பூர் நகராட்சியில் இன்று நடைபெரும் மறைமுக தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது

HIGHLIGHTS

ஆம்பூர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு
X

ஆம்பூர் நகராட்சி (கோப்புப்படம்)

ஆம்பூர் நகராட்சியின் நகர மன்ற தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது கடந்த 4-ந்தேதி நடந்த நகர மன்ற தேர்தலில் தி.மு.க. அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளராக 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஏஜாயஸ் அகமது நகர மன்ற தலைவருக்கு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து 19-வது உறுப்பினர் சபீர் அகமது தி.மு.க. போட்டி வேட்பாளராக போட்டியிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குவாதம் ஏற்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று 26-ந்தேதி சனிக்கிழமை காலை 10.30 அளவில் தேர்தல் நடத்த மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பின்படி இன்று காலை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. நகர மன்ற தேர்தல் போட்டியின்றி ஒருமனதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ள 16-வார்டு தி.மு.க. உறுப்பினர் ஏஜாயஸ் அகமது நகர மன்றத் தலைவராகவும் ஆம்பூர் நகர தி.மு.க. நகர செயலாளர் 14-வது வார்டு உறுப்பினர் ஆறுமுகம் நகர்மன்றத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆம்பூர் தோல் தொழிற்சாலை அதிபர்கள் சங்கம், ஆம்பூர் தொழிலதிபர்கள் ஆதரவு பெற்ற நகர்மன்றத் தலைவர் தி.மு.க. தலைமை அறிவித்த நகரமன்ற தலைவர் வேட்பாளர் ஏஜாயஸ் அகமது நகர மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகிய இருவரையும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இன்று நடக்கும் தலைவர் துணைத் தலைவர் தேர்தலுக்கு பிறகு தலைவர் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா மற்றும் நகராட்சி ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Updated On: 26 March 2022 2:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’