ஆம்பூர்  அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த நோயாளிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் என 6 பேர் உயிர் இழந்துள்ளனர்

இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது கொரோனா பாதிக்கப்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என்றும் நோயாளிகள் மூச்சுத்திணறல் காரணமாகவும், ஆஸ்துமா நோயாளிகள், வயது முதிர்ந்த காரணத்தினாலும், உயிரிழந்துள்தாகாவும் மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளதாகவும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அச்ச படுவதால் பரிசோதனை அதிகப்படுத்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!