ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!

ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!
X

ஆம்பூரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் தமுமுகவினர்.

ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 104 உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆம்பூர் த.மு.மு.க. சார்பில் ஒன்றிணைந்த 10 இளைஞர்கள், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை, அவரவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின், என பாகுபாடு இன்றி அவரவர்கள் முறையிலேயே அடக்கம் செய்து வருகின்றனர். தற்போது வரை 104 பேர் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியோருக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இவர்களின் இத்தகைய தொண்டு செயல்களைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்..

கொரோனா தொற்று ஏற்பட்டால் தமக்கும் தொற்று ஏற்படுமோ என்கிற பயத்தில் வீட்டுக்குள்தேளயே முடங்கிக் கிடக்கும் பலரின் எண்ணத்தை மனிதர்களாய் இருந்து மனிதநேயம் பாராமல் செய்துவரும் இவர்களின் தொண்டு பாராட்டுக்குரிய செயல்களே

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!