/* */

ஆம்பூர் அருகே மாணவியிடம் இருந்து செல்போனை திருடி சென்ற திருடர்கள்

ஆம்பூர் அருகே செல் போனில் ஆன்லைன் தேர்வுக்காக படித்து கொண்டிருந்த மாணவியின் செல்போனை கொள்ளையடித்து சென்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே மாணவியிடம் இருந்து செல்போனை திருடி சென்ற திருடர்கள்
X

ஆம்பூர் அருகே மாணவியிடம் இருந்து செல்போனை திருடி சென்ற திருடர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் குமரேசன் என்பவர் ஆயில் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மகள் கௌரி (பொறியியல் கல்லூரி மாணவி) தந்தைக்கு சொந்தமான ஆயில் கடையில் அமர்ந்து செல்போனில் ஆன்லைன் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தபோது தண்ணீர் குடிப்பதற்காக பின்பக்கமாக சென்றுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் கடைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள், செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்போன் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உமராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் பொதுமக்களிடமிருந்து செல்போன் கொள்ளையர்களை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் கடம்பூர் பகுதியை சேர்ந்த நசீர் முகமது என்பது தெரியவந்தது. தப்பியோடிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வைத்திருந்த மாணவியிடம் இருந்து செல்போனை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 6 July 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  7. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  8. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  9. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...