ஆம்பூர் அருகே செக்புக் தராததால் வங்கி முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

ஆம்பூர் அருகே வங்கி முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னிய நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான சுரேஷ் என்பவரின் மனைவி நந்தினி(26) என்பவர் உமராபாத் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் வங்கி காசோலை புத்தகம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதற்காகத் தான் வாடிக்கையாளராக உள்ள இந்தியன் வங்கியில் காசோலை புத்தகம் கேட்டு கடந்த இரண்டு மாதமாக வங்கி மேலாளர் அலைக்கழித்து வருவதாக கூறி மனமுடைந்த இளம்பெண் பெட்ரோல் கேனுடன் வந்து வங்கி முன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்
தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து வங்கி மேலாளர் இடம் விசாரணை மேற்கொண்டார். சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் இளம் பெண்ணிற்கு காசோலை புத்தகத்தை வங்கி மேலாளர் வழங்கினார்.
ஆம்பூர் அருகே வங்கி முன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu