ஆம்பூர்: மழையில் பணியாற்றிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு பலி!

ஆம்பூர்: மழையில் பணியாற்றிய 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு பலி!
X

ரயிலில் அடிபட்டு பலியான ரயில்வே ஊழியர்கள்.

ஆம்பூரில் மழையின்போது சிக்னல் கோளாறை சீரமைத்த ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூரு சென்னை ரயில்வே மார்க்கத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்வே ஊழியர்கள் முருகேசன் பொறியாளர் மற்றும் பீகார் மாநில இளைஞர் பர்வேஷ் குமார் டெக்னிசியன் ஆகியோர் கொட்டும் மழை சிக்னல் கோளாறு சரி செய்துவிட்டு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் சிக்கி இருவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!