மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
X

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் 

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆம்பூரில் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கடசமுத்திரம் பெரிய ஏரி முழு கொள்ளளவை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ஆம்பூர் அருகே இருக்கக்கூடிய அம்பேத்கர் நகர், பாங்கி ஷாப், பெரிவரிகம் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 10 நாட்களாக குடியிருப்புவாசிகள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் பத்து நாட்களாகியும் வெள்ள நீர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் மூலமாக தண்ணீரை வெளியேற்றி பாலாற்றில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அரசு கூடுதல் தலைமை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி ஜவஹர். ஐஏஎஸ் அதிகாரி பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வெள்ளநீர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்