ஆம்பூர்: பாலாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர்: பாலாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்
X

ஆம்பூர் அருகே, பாலாற்றில் மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளியது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒரு ஜேசிபி 1 டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில், மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரி பறிமுதல். செய்தனர். மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத்குமார், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகன், காஜா நவாஸ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!