ஆம்பூர் அருகே எருது விடும் விழா: 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..

ஆம்பூர் அருகே எருது விடும் விழா: 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..
X

ஆம்பூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழா'

ஆம்பூர் அருகே 179 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் 179 ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர கர்நாடக மாநிலத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறைந்த நேரத்தில் வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2 ஆவது பரிசாக 75, ஆயிரம் ரூபாயும், 3 ஆவது பரிசாக 50 ஆயிரம் என 51 பரிசுகள் வழங்கப்பட்டது,

இவ்விழாவினை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டு ரசித்தனர் பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போடப்பட்டிருந்தன மேலும் பாதுகாப்பையும் மீறி எருதின் மீது கை போட்ட 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!