ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புடவை வியாபாரியிடம் வழிப்பறி

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புடவை வியாபாரியிடம் வழிப்பறி
X

வழிப்பறி செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்


ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பட்டு புடவை வியாபாரியிடம் காரை மறித்து ரூபாய் 1.5 லட்சம் வழிப்பறி. போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் தன்னுடைய தந்தையுடன் காரில் சத்தியமங்கலத்தில் இருந்து வேலூர், குடியாத்தம் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் உள்ள கடைகளுக்கு பட்டுப் புடவைகளை எடுத்து சென்று விநியோகம் செய்துவிட்டு வசூலான 1.5 லட்சம் பணத்தை எடுத்துக்கண்டு மீண்டும் காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக காரை நிறுத்தி உள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த கார் இவர் நிறுத்திய காரின் முன்பாக நிறுத்தி போலீஸ் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் கனகராஜிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கனகராஜ் காரில் இருந்து ஆவனங்களை எடுக்கும் போது மர்ம நபர்கள் காரில் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அவர்கள் வந்த காரில் தப்பி சேன்றனர்.

சம்பவம் குறித்து கனகராஜ் ஆம்பூர் கிராமியப் காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே காவலர்கள் உடையணிந்து காரில் வரும் நபர்களை நோட்டமிட்டு அவர்கள் இணைந்து பணம் பறித்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!