ஆடுகளமான ஆளில்லா பஸ் ஸ்டாண்ட்

ஆடுகளமான ஆளில்லா பஸ் ஸ்டாண்ட்
X
பேருந்து நிலையம்,விளையாட்டு மைதானமானது

ஆம்பூரில் முழு ஊரடங்கை விதிகளை பின்பற்றாமல் இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக ஆம்பூர் பேருந்து நிலையம். மாறியது.

எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் ஆம்பூர் பேருந்து நிலையம் தற்போது தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டு பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து நிலையத்தை விளையாட்டு மைதானமாக எண்ணி ஆங்காங்கே கிரிக்கெட் விளையாடிக்கொண்டும் வாலிபால் விளையாடிக்கொண்டும் சுற்றி திரிகின்றனர்.

கடந்த கொரோனா அலையின் போது விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கின் போது மைதானங்களில் விளையாடிய வாலிபர்களையே ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் விரட்டி அடித்த நிலையில் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இந்த சூழலில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து நிலையத்தில் கும்பலாக விளையாடி வருவது நோய் பரவ வழிவகுத்து வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!