ஸ்டாலின் கனவு மட்டுமே காண்பார்-முதல்வர் பழனிச்சாமி

ஸ்டாலின் கனவு மட்டுமே காண்பார்-முதல்வர் பழனிச்சாமி
X

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என கனவு மட்டுமே காண்பார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆம்பூரில் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசும்போது,திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்காமல் அவர்களின் குறைகளையும் தீர்க்காமல் இருந்தார். ஆனால் தற்போது பொதுமக்களிடம் சென்று குறைகளை கேட்டு வருகிறார்.

முதல்வர் என அவரால் கனவு மட்டுமே காண முடியும். ஆனால் ஆக முடியாது.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.பெண்களுக்காக 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது என்ற முதல்வர், மேலும் அதிமுக அரசு செய்த பல நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்