ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பணியின்போது விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு
X

ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தீர்க்கப்பட்டு அடுத்த சிகரளபள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வினோத்குமார் ரயில் பாதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்

இதுதொடர்பாக தகவல் அறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது