திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு
X

கோப்பு படம் 

உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்

உக்ரைன் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 மாணவ மாணவிகள் (16 மாணவர்கள், 7 மாணவிகள்) தவித்து வந்தனர்.

இதில் வாணியம்பாடியை சேர்ந்த 2 மாணவர்களும், ஆம்பூரை சேர்ந்த ஒரு மாணவரும் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் தங்களது வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

ஏனைய மாணவர்களில் ருமேனியாவில் 4 மாணவர்களும் ஸ்லோவேக்கியா நாட்டில் நான்கு மாணவர்களும் ஹங்கேரி நாட்டில் நான்கு மாணவர்களும், போலந்து நாட்டில் மூன்று மாணவர்களும் மால்டோவாவில் ஒரு மாணவரும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளார்கள்.

2 மாணவர்கள் மட்டுமே உக்ரைன் நாட்டில் சுமி மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்