திருநெல்வேலி டவுண் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா பங்கேற்பு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா
வணிகர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிப்பதாக முதல்வர் வாய்மொழி உத்திரவாதம் வழங்கியுள்ளதாகவும் ஹோட்டல் உள்ளிட்ட உணவு சார்ந்த கடைகளை இரவு 10 மணி வரை இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் நெல்லையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.
நெல்லை டவுண் வியாபாரிகள் சங்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கொரோனா பேரிடர் காலத்தில் வணிக நிறுவனங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இரண்டாண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறை மூலம் வணிகர்கள் மூலம் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.முந்தைய அரசு வழக்குகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.ஆகையால் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் எந்த நிபந்தனையுமின்றி ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
கொரோனா காலத்தில் தமிழக அரசு அனைத்து கடைகளையும் 9 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளதை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பதாகவும் ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு பண்டங்கள் விற்பனை கடைகளை 10 மணி வரை இயங்க அரசு அனுமதி அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மாநகராட்சி,நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளில் 6 மாதம் விலக்கு அளிக்கப்படவேண்டும்.குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு அனுமதி அளித்து அங்குள்ள கடைகளை திறக்க அரசு வழிவகை செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டிக்கிறது எனவும்
மத்திய மாநில அர்சுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்ட அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழகம் முழுதும் பல மார்கெட்டுகள் பெரிய மைதானங்களுக்கு மாற்றபட்டது அதனை மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்ற வேண்டும்.கொரனா பேரிடரில் உயிரிழந்த வணிகர்களுக்கு 10 லட்சம் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வணிகர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிப்பதாக முதல்வர் வாய்மொழி உத்திரவாதம் வழங்கியுள்ளாதாகவும் வணிகர் நல வாரியத்தில் வணிகர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு கட்டணம் இல்லாமல் அனுமதி அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu