உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நெல்லையில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நெல்லையில் திமுகவினர் கொண்டாட்டம்
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி நெல்லை திமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி நெல்லை திமுக சார்பில் கேக் வெட்டி, கொடியேற்றி, நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

நெல்லையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், கட்சி கொடியை ஏற்றி வைத்து, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மத்திய மாவட்ட திமுக தச்சநல்லூர் மேற்கு பகுதி கழகம் சார்பில் செயலாளர் டாக்டர் சங்கர் ஏற்பாட்டில் தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதேபோல் தச்சநல்லூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் முன்னாள் மண்டல சேர்மனும், பகுதி செயலாளருமான சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சந்திப்பு சிந்துபூந்துறை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி 44 கிலோ கேக் வெட்டியும், 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர மாவட்ட பொறுப்பாளர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் சங்கர்நகர் பேச்சிப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் டாக்டர் சங்கர், சுப்பிரமணியன், பூக்கடை அண்ணாத்துரை, கவிஞர், மூர்த்தி, நிர்வாகிகள் எல்.எஸ். சீனிவாசன், குருசாமி சங்கரகுமார், எல்ஐசி பேச்சிமுத்து, பிரம்மநாயகம், மாரிச்சாமி, இலக்கிய அணி வினோத், பொன் தங்கராஜ், போஸ், அக்பர் அலி, சங்கரன் கிட்டுப்பிள்ளை, காசிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு