ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்
X

நெல்லைமாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்.

நெல்லை மாவட்டத்தில் 2069 பதவி இடங்களுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6871 பேர் வேட்பு மனு தாக்கல்

நெல்லை மாவட்டத்தில் 2069 பதவி இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 6871 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் , ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2069 பதவியிடங்களுக்கு நேரடியாக மக்கள் வாக்களிக்கும் முறையில் தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான புதன்கிழமை மாவட்டம் முழுவதும் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள் , சுயேட்சைகள் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு என ஏராளமானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அலை மோதியது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 57 நபர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 516 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 350 பேரும் , ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1553 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர் . மொத்தம் இன்று ஒரே நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்டத்தில் 2069 பதவி இடங்களுக்கு 6871 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை பல்வேறு பதவி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மனு தாக்கல் செய்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து பரிசீலனை செய்யப்பட உள்ளது.

இதனிடையே தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மாவட்டத்தில் நடந்து வருகிறது. அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு சின்னங்கள் மற்றும் வேட்பாளர் பெயர் அச்சடிப்பதற்காக மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு 56 பண்டல் வாக்குச்சீட்டு வந்தது. சிகப்பு , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ள வாக்கு சீட்டு கட்டுகள் மாட்ட ஆட்சியர் அலுவகத்தில் இறக்கி வைக்கப்பட்டுஅங்கிருந்து அந்த தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!