தச்சநல்லூர் அருகே பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து
நெல்லை தச்சநல்லூர் அருகே பழைய பேப்பர், பாலிதீன் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை மொத்தமாக சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக தச்சநல்லூர் ராமையன்பட்டி அருகே பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் வைத்துள்ளார். இங்கு சேமித்து வைக்கப்படும் பழைய பொருட்களை பேப்பர் தனியாக பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கும் பணி நடைபெறும்.
இந்நிலையில் இன்று இந்த குடோனில் பணி நடந்து கொண்டிருந்த போது கழிவுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென எரிந்தது. கரும்புகையும் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்தது பாளையங்கோட்டை, பேட்டை தீயணையப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வெளியே வைத்தனர்.
இதனால் பெரிய அளவிலான விபத்து தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது . தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu