நெல்லையில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

நெல்லையில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
X

நெல்லையில் பராமரிப்பு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

பராமரிப்பு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்கள் கைது காவல்துறையினர் நடவடிக்கை.

தமிழகத்தில் மாற்றுதிறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 2,500 முதல் 3,000 ரூபாய் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மாற்று திறனாளிகள் உதவி தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறுகையில்:- கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்க கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையிலும் தற்போது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. அண்டை மாநிலங்களில் உதவித்தொகை 2,500 முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அனைத்திலும் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கவேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த உடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் உதவி தொகை வழங்கும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் சட்டமன்றம் நடைபெறும் போது சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil