நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி செல்வலட்சுமி தேர்வு

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி செல்வலட்சுமி தேர்வு
X

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி திமுகவைச் சேர்ந்த செல்வலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி திமுகவை சேர்ந்த செல்வலட்சுமி தேர்வு. ஆட்சியர் விஷ்ணு அறிவித்தார்.

நெல்லை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி திமுகவைச் சேர்ந்த செல்வலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து நடந்து முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் காண தேர்தல் நடைபெற்றது. காலை நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் 12-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த வி எஸ் ஆர். ஜெகதீஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செல்வலட்சுமி துணைத்தலைவர் பதவிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு தாக்கல் செய்தார். இவருக்கு போட்டியாக மற்ற உறுப்பினர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் துணைத் தலைவராக செல்வலட்சுமி வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா