நெல்லை மாநகராட்சி புதிய மேயர், துணை மேயருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து

நெல்லை மாநகராட்சி புதிய மேயர், துணை மேயருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து
X

நெல்லையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வாழ்த்து.

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கு SDPI நிர்வாகிகள் வாழ்த்து.

நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயராக பொறுப்பேற்றுள்ள மேயர் சரவணன், துணை மேயர் K.R.ராஜூ ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாநகர் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், மேயர் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்ட பணிகள், பெருமழை வெள்ளம் மற்றும் கொரோனா கால பணிகள் குறித்த கையேடும் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜவுளி காதர், சமூக ஊடக அணி மாநகர் மாவட்ட தலைவர் முகம்மது கௌஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட துணைத் தலைவர் போத்தீஸ் பாபு, நெல்லை தொகுதி நிர்வாகிகள் டவுண் காஜா, பேட்டை காஜா, காதர்ஷா, ரஹீம்ஷா, செய்யது அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story