பள்ளியை திறக்கக்கோரி தனியார் பள்ளிகள் சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கோரி நெல்லையில் தனியார் பள்ளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
கொரனோவால் மாணவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லும் அவலத்தையும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கோரி நெல்லையில் தனியார் பள்ளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரனோ 3ம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்படுவதால் மாணவர்கள் பலர் கல்வியை இடை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லும் அவலம் நிலவுவதாகவும், ஆசிரியர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து சங்க செயலாளர் சுரேஷ் கூறுகையில், கொரனோ தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கற்றல் கற்பித்தல் நடைபெறாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் துயரத்தில் உள்ளனர். தனியார் பள்ளிகளை நடத்த இயலாத சூழ்நிலையில் பள்ளி தாளாளர்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
ஆன்லைன் கல்வி முறையால் மாணவர்களும் முழுமையான கற்றல் திறனை இழந்து பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu