காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
X
சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சுத்தமல்லி, பழவூர், பால்பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்ற படையப்பா (40). கடந்த 23.04.2022 ம் தேதி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த சுத்தமல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரேசாவை ஆயுதத்ததால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவாளி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கவனத்திற்கு வந்ததால், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.

அதன்பேரில், ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து குற்றவாளியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story