கல்லிடைக்குறிச்சிபோலி எம்சாண்ட் ஆலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்லிடைக்குறிச்சிபோலி எம்சாண்ட் ஆலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
X

திருநெல்வேலியில் போலீ மணல் ஆலை,

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சரின் உறவினர், கனிமவளத்துறை அதிகாரிகள் என பலரும் சிபிசிஐடி விசாரணையில் சிக்க வாய்ப்பு..!

நெல்லை:அம்பாசமுத்திரம், பொட்டல் கிராமத்தில் சட்டவிரோத ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபிறபித்துள்ளது.


நெல்லைமாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் M.Sand-க்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக ஆறு மணல் எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தி வருவதாக சிவசங்கரன் என்பவர் பொதுநலன் வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். இது குறித்து ஆய்வு செய்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, வேறு அமைப்பிற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணை செய்ய வேண்டும் என குற்றம்சாட்டுக்கு உள்ளானவரின் உறவினர் கிருஸ்டி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

* இந்த வழக்கில் 27,000 கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது.

* மணல் திருட்டில் ஈடுபட்ட அவருக்கு 9 கோடி வரை அபதாரம் விதிக்கப்பட்டு அவரது M.Sand எடுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்த லாரிகள் பறிமுதல் செய்யும் போது அதில் அரசு வழங்கும் போக்குவரத்து அனுமதி சீட்டு கையெழுத்து இல்லாமலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* இந்த வழக்கில் பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது.

* கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி இடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

* மேலும் புதிதாக மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும் பொழுது மணல் எடுக்கும் இடம் அதை பாதுகாக்க வைக்கும் குடோன் ஆகியவற்றில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மேலும் மணல் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தினை திடீர் ஆய்வு நடத்த வேண்டும் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதனால் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சரின் உறவினர், கனிமவளத்துறை அதிகாரிகள் என பலரும் இவ்வழக்கில் சிக்குவார்கள் எனவும், இவ்வழக்கை தற்போதைய விசாரணை அதிகாரியும் சரியாக கையாளாமல் குற்றவாளிகளை தப்பிக்க உடந்தையாக இருந்து பல்வேறு முறைகேடுகளை செய்தார் எனவும், அவரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார்கள் வழக்கின் தன்மை அறிந்த நேர்மையான காக்கிகளும், சமூக ஆர்வலர்களும்.

இதைப் பற்றி ஜூலை8 அன்று இன்ஸ்டா நியூஸ் செய்தி கல்லிடைக்குறிச்சிபோலி எம்சாண்ட் ஆலை வழக்கு வெளியிட்டிருந்தோம் , அதை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யவும்: https://www.instanews.city



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!