நெல்லை 54வது வார்டு அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் A.S.நவீன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் A.S.நவீன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 54 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் A.S.நவீன். இவர் திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் 22 வயதேயான இளம் வேட்பாளர் ஆவார். இவர் இன்று காலை 54 வார்டுக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார் அப்போது வாக்காளர்கள் காலைத் தொட்டு வணங்கி தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டார்.
இளம் வயது வேட்பாளர் A.S.நவீன் வாக்காளர்களிடம் தேர்தல் வாக்குறுதிகளாக தன்னை வெற்றிபெறச் செய்தால், 54 வது வார்டு பகுதியில் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தருவேன். வீட்டுமனை உள்ளவர்களுக்கு இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசின் மானியம் 2,40,000 ரூபாய் பெற்று தருவேன். 54 வது வார்டு பகுதியில் குடிசை மாற்று வாரியம் பகுதியில் சுடுகாடு, கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைத்து தரவும், ஆனைகுளம் பகுதி மக்களுக்கு வீட்டிற்கு ஒரு குடிநீர் இணைப்பு ஏற்பாடு செய்து தருவேன் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து தருவதற்கு அயராது உழைப்பேன் என்று உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu