திருநெல்வேலியில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்

திருநெல்வேலியில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்
X

அதிமுகவில் இணைந்த திமுகவினர்

அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா முன்னிலையில் திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக நெல்லை மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் களக்காடு ஓன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லாசிரியர் செல்வராஜ், களக்காடு நகர கழக செயலாளர் தாஸ், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஏற்பாட்டில், திமுக களக்காடு வடக்கு ஓன்றிய இளைஞரணிஅமைப்பாளர் தேவதாசன், எட்வின், கனகராஜ், பெருமாள் குளம் ராஜேந்திரன், சிதம்பராபுரம் சுடலை உட்பட 20 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது நெல்லை மாவட்ட கழக பொருளாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செளந்தரராஜன், நெல்லை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags

Next Story