நெல்லை மண்டலம் 21வது வார்டு பகுதியில் மேயர், துணைமேயர் ஆய்வு

நெல்லை மண்டலம் 21வது வார்டு பகுதியில் மேயர், துணைமேயர் ஆய்வு
X

நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு.

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முன்னதாக மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் பால்வண்ணநாத சுவாமி திருக்கோவில் அருகே மரக்கன்றுகளை நட்டினார்கள்.

அதனை தொடர்ந்து வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாய்க்காலினை பொதுப்பணித்துறையுடன் இணைந்து தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் கருங்காடு செல்லும் வழியில் மயானகரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ரோட்டை அகலப்படுத்தி தார்சாலை அமைத்திடவும், சுமார் 100 நபர்கள் அமரும் வகையில் ஓய்வு அறை அமைத்திடவும், மயானக்கரை செல்லும் பாதையில் மின் விளக்கு அமைத்து சுற்றுபகுதி முழுவதும் முள்வேலி அமைத்து கதவு போடவும், தகன மேடையின் உயரத்தினை அதிகபடுத்தவும் கூடுதலாக சிறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்திடவும், கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றிட பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் என்.நாராயணன், உதவி ஆணையாளர் (பொ) தபைஜு, நெல்லை மண்டல தலைவர் செ.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் இ.ராஜேஸ்வரி, பா.மாரியப்பன், அ.ஷேக்மன்சூர், மு.சுப்பிரமணியன் அவர்கள், அல்லாபிச்சை, மற்றும் சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர்கள் முருகன், ஐயப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!