குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்
X

குறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்

பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது .

இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் நடைபெற்றது. முருக பெருமான் செப்பு கடையத்தில் கோவிலிலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் தேரை 4 ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself