கூடன்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட ஜெ.இ.இ நுழைவு தேர்வு பயிற்சி மாணவர்கள்

கூடன்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட ஜெ.இ.இ நுழைவு தேர்வு பயிற்சி மாணவர்கள்
X

திருநெல்வேலி மாவட்டம் ஐ.ஐ.டி, ஜெ.இ.இ நுழைவுத் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் கூடன்குளம் அணு மின் நிலைய தொழில் நுட்ப செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

ஜெ.இ.இ நுழைவு தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் ஆட்சியர் வழிகாட்டுதலில் கூடன்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஐ.ஐ.டி, ஜெ.இ.இ நுழைவுத் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழிகாட்டுதலில் கூடன்குளம் அணு மின் நிலைய தொழில் நுட்ப செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு, IIT, JEE நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஏற்பாட்டின்படி 11.12.2021 அன்று கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டையில் வைத்து நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இதில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து 159 மாணவர்கள் மற்றும் 284 மாணவிகளும் ஆக மொத்தம் 443 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

இதில் மதிப்பெண் அடிப்படையில் 72 மாணவ,மாணவியர்கள் அழைக்கப்பட்டு டிசம்பர் 18,19 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்முகத்தேர்வில் மாணவர்களின் ஆர்வம், திறமை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கேட்டறிந்து 23 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 7 மாணவ,மாணவியர் தமிழ் வழியில் பயின்றவர்கள் ஆவார்கள். தேர்வு செய்யப்பட்ட 23 மாணவ மாணவியர்களுக்கு ஜனவரி 12ம் தேதி முதல் முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி ஆன்லைன் மூலமாக வகுப்புகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) திருச்சி பேராசிரியை முனைவர் மல்லிகா மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வைப் பற்றிய விளக்கங்களை தெளிவாக வழங்கினார். இம்மாதிரியான பயிற்சி IIT, JEE நுழைவுத்தேர்விற்கான அரசுப்பபள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இம்மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் 19.01.2022 முதல் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) பேராசிரியர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் இம்மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து இத்தேர்வு பற்றிய தெளிவான விளக்கத்தையும், எவ்வாறு கற்க வேண்டியது என்பது பற்றியும் மாணவர்கள் உற்சாகம் அடையும்படியாகவும், தன்னம்பிக்கை ஏற்படும் விதத்திலும், விளக்கி கூறினார்.

இப்பயிற்சியில் உள்ள 23 மாணவ- மாணவிகளை கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாட்டின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வமுடனும் கலந்து கொண்டனர். இந்த பயணம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக கூறினார்கள். அங்கு அணுமின்நிலையம் இயங்கும் முறைகள், தேவையான பொருட்கள், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய தெளிவான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அணுமின் நிலையத்தில் உள்ள அனைத்து தொழில் நுட்பக் கருவிகளைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களுக்கு புதிய உற்சாகம் மற்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளர் மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ஜெ.பொன்னையா, துணை ஒருங்கிணைப்பாளர் சி.என் பிரபு ரஞ்சித் எடிசன், முதுகலை ஆசிரியர் சியாமாளா பாய் ஆகியோர் மாணவ, மாணவிகளை கூடன்குளம் அணுமின் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு