தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் : ஆட்சியர் வேண்டுகோள்
திருநெல்வேலி கலெக்டர்
மழை காரணமாக பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ, நீர்நிலைகளில் வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் இராதாபுரம் மற்றும் திசையன்விளை பகுதியில் 30 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 9 மி.மீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து வானிலை மையம் மழை இருக்கும் அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம், செல்பி எடுக்கவும், ஆற்றின் அருகே செல்லவும் வேண்டாம், மற்றும் இந்நேரத்தில் சுற்றுலா தளங்களுக்கும் செல்ல வேண்டாம். என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 6 அனைகள் உள்ளது. இதில் பாபநாசம் அணையில் 94 சதவீதம் கொள்ளளவும், மனிமுத்தாறு அணை 50 சதவீதம் கொள்ளளவும், கொடுமுடியாறு அணை 93 சதவீதம் கொள்ளளவு எட்டியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் மற்றும் நம்பியாறு ஆற்றிலும் தண்ணீர் அதிகமாக வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் பழுதுகள் ஏதேனும் எற்பட்டால் மழை காலம் முடிந்தவுடன் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அதை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தாழ்வான பகுதிகளில் எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சித்துறையினர் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் எற்படுத்தப்பட்டு வருகிறது.
மழை காலங்களில் காட்சிய நீர் குடிக்கவேண்டும், அவசர உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுபாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0462-2501012, 0462-2501070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu